Sunday, January 30, 2011

சிக்கிய ஜோதிட, சித்த, மருத்துவ, மாந்திரீக வல்லுநர்.

ஜோதிடம், மாந்திரீகம் எனச் சொல்லிபெண்கள் - நடிகைகளிடம் பாலியல் கொடுமை!

காவல்துறையிடம் சிக்கிய மந்திரவாதி கக்கிய உண்மை
கோவை, ஜன.30- ஜோதிடம், மந்திரம் சொல்வதாகக் கூறி பெண்களை மயக்கி காம இச்சைக்கு ஆட்படுத்திக் கொண்ட மந்திரவாதி பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவையில் கைதான மந்திரவாதியின் வலையில் நடிகை உள்பட பெண்கள் மயங்கியது எப்படி? என்பது குறித்து பல தகவல் வெளியாகி உள்ளது.

கோவை செல்வபுரம் எல்.அய்.சி. பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி.ஈஸ்வரன் (வயது 49). இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஜோதிட, சித்த மருத்துவ, மாந்திரீக வல்லுநர் என்று கூறி ஜோதிடம் பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் செல்வபுரம் வடக்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த சந்திரிகா என்ற பெண் ஈஸ்வரனை சந்தித்தார். தனது மகனுக்கு வேலை கிடைப்பதற்காகவும், கடன் பிரச்சினை தீருவதற்காகவும் வந்ததாக அவர் கூறினார்.

பூஜை செய்வதாகக் கூறி அதையடுத்து அந்த பெண்ணை பூஜையறைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்வதாகக் கூறி அவரிடம் ஈஸ்வரன் தவறாக நடக்க முயன்றதாக புகார் கூறப்பட்டது.

சந்திரிகா கொடுத்த புகாரின் பேரில் ஈஸ்வரனை கோவை செல்வபுரம் காவல் துறையினர் அவரைக் கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டப் பிரிவு 4 மற்றும் இந்திய தண்டனை சட்டம் 420 (ஏமாற்றுதல்), 508 (தன்னை பிரபலமான மனிதராக காண்பித்து ஏமாற்றுதல்)ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில் அவர் மந்திரவாதி என்று தெரியவந்தது. அவரது மாந்திரீக நிலையத்தில் இருந்து வசிய லேகியம், மாந்திரீக கற்கள், மை போன்ற பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை பரிசோதனை செய்தபோது அந்தப் பொருள்களும் போலியானவை என தெரியவந்தது.

கைதான ஈஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய மாந்திரீக நிலையத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. மேலும் அவரது வீடு, மாந்திரீக நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட குறுந்தகடுகள் ஒளிப்படங்கள் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைதான வி.டி. ஈஸ்வரன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:

எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி. நான் 10ஆம் வகுப்பு வரை படித்து உள்ளேன். மேற் கொண்டு படிக்க எனக்கு இஷ்டமில்லை. அதனால் நான் ஜோதிடம் பார்த்து வருமானம் சம்பாதிக்கலாம் என்று திட்டமிட்டேன்.

அதையடுத்து ஜோதிடம் தொடர்பான புத்தகங்களைப் படித்தேன். ஜோதிடம் பார்க்கும் சிலரிடம் ஜோதிடம் பார்க்க செல்வது போல் அவர்களுடைய பேச்சு, பாவனைகளையும் கற்றுக்கொண்டேன்.

பின்னர் கோவை வந்து முதலில் ஒரு லாட்ஜில் வாடகைக்கு அறை எடுத்து ஜோதிடம் பார்ப்பதாகக் கூறினேன். என்னுடைய பேச்சுத்திறமையால் நான் என்னிடம் வருவோ ரின் பிரச்சினைகளை தெரிந்து கொள்வேன்.

நான் கோவை மக்களிடம் பிரபலமானேன். அப்போதுதான் செல்வபுரத்தில் ஹம்சவேணி ஜோதிட சித்தமருத்துவ மாந்திரீக நிலையத்தை தொடங்கினேன். எனது மாந்திரீக நிலையத்துக்கு நிறைய பேர் வரத் தொடங்கினார்கள். அவர்களில் பலர் ஆண், பெண் வசியம் என்றுதான் வருவார்கள்.

குறிப்பாக இளம்பெண்கள் காதலர்களை வசப்படுத்துவதற்காக வருவதுண்டு. அவர்களிடம் நான் பூஜை நடத்துவதுபோல் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.

எனக்கு 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் குழந்தையின்மைக்கு தீர்வு கேட்டும், பரிகாரம் செய்வதற்காகவும் வந்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு நான் செக்ஸ் ஆசையைத் தூண்டும் வகையில் பேச்சுக் கொடுப்பேன். அதற்கு இடம் கொடுக்கும் பெண்களை மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருந்து இருக்கிறேன். அந்தப் பெண்கள் எனக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வரை பணம் கொடுத்துக் செல்வதுண்டு.

என்னிடம் வந்த பெண்களில் ஒரு நடிகையும் உண்டு. நான் என்னிடம் வரும் பெண்களிடம் மிகவும் எச்சரிக்கையோடு நடந்து கொள்வேன். யாராவது எனது பேச்சுக்கு இடம் கொடுக்காவிட்டால் அவர்களிடம் எனது வேலையைக் காட்ட மாட்டேன். பல பெண் களிடம் பரிகார பூஜை செய்வது போல் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டு இருக்கிறேன்.

நான் செய்ததை பற்றி யாரிடமாவது சொன்னால் அவர்கள் ரத்தம் கக்கி இறந்துவிடுவார்கள் என்று கூறி மிரட்டி அனுப்பிவிடுவேன். அதனால் யாரும் என்னைப்பற்றி யாரிடமும் தெரிவிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது சிக்கிக்கொண்டேன். - இவ்வாறு அவர் கூறியதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
http://viduthalai.in/new/e-paper/2389.html இதைப்போல் பத்திரிகைகள் இணையதளங்கள், தொலைக்காட்சிகள் மூலமாக மக்களை மூளை சலவை செய்து பெண்கள் மூலமாக சுகமும் ஆண்கள் மூலமாக அவர்களின் குடும்பப் பெண்களும் செல்வங்களும் அடைய எத்தனையோ ஆனந்தாக்க‌ள், ஸ்வாமிகள், குருஜிக்க‌ள், யோகிக‌ள், சித்த‌ர்க‌ள், ஜோசிய‌ர்க‌ள், ம‌ந்திர‌வாதிக‌ள், ஆவிகளுடன் தொடர்பு கொண்டு பேசி உங்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தீர்த்து வைக்கும் பிரம்ம சன்யாசிகள் etc. etc. .... எத்தனையோ பேர் இருக்கும் பொழுது சஞ்சலமேன்?

சர்வ சகல சித்த சர்க்கரை வாங்கி பய‌னடையுங்கள்.
பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கி தோன்றும் ப‌ட‌த்தில் மீண்டும் சொடுக்கி  ப‌டிக்க‌லாம்.

3 comments:

 1. மூட நம்பிக்கைகள் இருக்கும் வரை சாமியார்களும் இருக்கவே செய்வார்கள்.

  மக்களின் அறியாமையையும் இயலாமையையும் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்டம் போடும் சாமியார்களை ஒழித்துக் கட்டும் அதே வேளையில் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்கவும் வேண்டும்.

  ReplyDelete
 2. ithu varaikum intha aal unmai endru nambivanthen

  ReplyDelete
 3. கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
  http://www.sinthikkavum.net/2011/11/blog-post_15.html

  ReplyDelete