Sunday, January 23, 2011

அய்யப்பன் மகரஜோதி புரட்டு அம்பலம்.

ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை ஒரு ஆன்மிக மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.

உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும், - உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

The Times of India பிளிட்ஸ் தெகல்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமலர் விடுதலை The Illustrated Weekly களிலிலும் அம்பலம்.

மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலைதான்
சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?

பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அப்படியும் இப்படியுமாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

வழக்கம்போல இவ்வாண்டும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் சென்றனர் (14.1.2011) மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது நள்ளிரவில் புல்மேடு எனும் இடத்தில் கடுமையான பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது.

அதில் 102 பேர் பரிதாபகரமான முறையில் சாகடிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.


மகரஜோதி - நடந்தது என்ன! VIJAY T.V.

Sabarimala Makara Jyothi FAKE – 1

Sabarimala Makara Jyothi FAKE - 2

23 Jan 2011. மகர ஜோதி மோசடி! உச்சநீதிமன்றத்தில் சேனல் எடமருகு வழக்கு.

புதுடில்லி : "மகர ஜோதி' என்பது ஒரு அதிசயம் அல்ல. அது மனிதரால் ஏற்றப்படும் தீபம். பொன்னம்பல மேட்டில் இப்படிப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி மூட நம்பிக்கையை வளர்ப்பதற்கு தடை விதிக்க வேண்டும். "மகர ஜோதி' விவகாரத்தில் நடக்கும் மோசடியை வெளிக்கொரண வேண்டும் எனக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் தேதி சபரிமலை அருகே, புல்மேடுவில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 106 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சமீபத்தில் விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் "மகர ஜோதியை மனிதர் யாராவது ஏற்றுகின்றனரா? இந்த விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். மகர ஜோதி தோன்றுவது குறித்து திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு விளக்கம் அளிக்க வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சேனல் எடமருகு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது : சபரிமலை பொன்னம்பல மேட்டில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மகர ஜோதி தெரிகிறது. இதை அதிசயமானது மற்றும் புனிதமானது என, பல மாநில மக்கள் கருதுகின்றனர்.

அதனால், இந்த ஜோதியைக் காண, ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை வருகின்றனர். பொன்னம்பல மேட்டில் தெரியும் இந்த மகர ஜோதியானது, மூன்று முறை ஒளிந்து பின்னர் மறைந்து விடும்.

திட்டமிட்ட நாடகம்!

சபரிமலை கோவிலை நிருவகித்து வரும் தேவஸ்வம் போர்டும், இந்த மகர ஜோதியை அதிசயம் என்று கூறி வருவதால், இயற்கைக்கு முரணான இதைக் காண வரும் பக்தர்கள் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.
மகர ஜோதி என்பது அதிசயம் அல்ல. கேரள மாநில மின்வாரியம் மற்றும் காவல்துறையினர், திருவாங் கூர் தேவஸ்வம் போர்டுடன் இணைந்து நடத்தும் நாடகம்.

பெரிய பாத்திரத்தில் சூடத்தை ஏற்றி, பின்னர் அதை மூடி மறைத்து ஒளிருவது போல காட்டுகின்றனர். இது செயற்கையாக உருவாக்கப்படும் ஜோதியே.

மனிதரால் உருவாக்கப்படும் இந்த மகர ஜோதியை ஒரு அதிசயம் எனக் கூறி, மக்களிடையே மூடநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர்.

இது அரசியல் சட்டத்தின் 21 மற்றும் 25ஆவது பிரிவுகளை மீறிய செயல்.

கடந்த 1999ஆம் ஆண்டில் மகர ஜோதியை காண வந்த பக்தர்கள் 53 பேர் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 106 பேர் பலியாகியுள்ளனர்.

எனவே, செயற்கையாக தீபத்தை ஏற்றி, அதை மகர ஜோதி எனக் கூறி மக்களை ஏமாற்றும் செயலில் ஈடுபட சம்பந்தப்பட்ட நிருவாகத்தினருக்குத் தடை விதிக்க வேண்டும்.

இந்த ஜோதி இயற்கையானது அல்ல என, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி, கேரளா, தமிழகம், ஆந்திர, கர்நாடக மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
SOURCE: http://viduthalai.in/new/e-paper/1876.html
-----------------------------------------

மல்லிகைப்பூ விற்கவும், கருவாடு விற்கவும் தான் விளம்பரம் தேவையில்லை; ஆனால் கடவுள் வியாபாரம் செய்யக் கண்டிப்பாய் விளம்பரம் வேண்டும்.

விளம்பரமில்லாமல் எந்தக் கடவுளாலும் வாழ முடியாது. இது ஆண்டாண்டு கால உண்மை.

தேர், திருவிழா, பூஜை, புனஸ்காரம், விரதம், நேர்த்திக் கடன், வேண்டுதல், படையல் இவையெல்லாம் இல்லாமல் எந்தக் கடவுளாவது உண்டா?

இதையெல்லாம் விட கூட்டம் சேர்க்க கூடுதலாக அற்புதம் புரிந்ததாகக் கதைகள் பரப்பப்படும். அப்படி அய்யப்பனுக்காகப் பரப்பப்பட்ட புளுகுதான் மகரஜோதி.

பழனி மலையாண்டிக்கு தைப்பூசம் மட்டும் தான் வசூல். ஆனால் அய்யப்பன் வணிகர்களான, கேரளக்காரர்கள் ஆண்டுதோறும் மூன்று முறை பக்த சிகாமணிகளை வரவழைத்து கறந்து விட ஒரு ‘டெக்னிக்’ வைத்திருக்கிறார்கள்.

கார்த்திகை தொடக்கத்தில் நடைதிறப்பின் போது ஒரு முறை; மகர ஜோதி தரிசனம் என்று ஒரு முறை; ‘விஷீ’ என்று கூறி ஒருமுறை; இப்படி 3 தடவை வசூல் நடக்கிறது.

சபரிமலையில் பொன்னம்பலமேடு என்னும் இடத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் தானாகத் தோன்றும் ஜோதிதான், மகர ஜோதி என்னும் மகா அற்புதம் என ஒவ்வொரு ஆண்டும் ஒரு பித்தலாட்டம் நிகழ்த்தப்படுகிறது.

முதலில் ஓர் இடத்தில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட நாளில் ஒன்று தானாகத் தோன்ற முடியாது; அதற்கு வாய்ப்பே இல்லை. அப்படித் தோன்றுகிறதென்றால் அது நிச்சயம் மனித வேலையாகத் தான் இருக்கமுடியும். இதைக் கண்டுபிடிக்க கேரளப் பகுத்தறிவாளர்கள் முயன்று. அம்பலப்படுத்தினார்கள்.

“1925-க்கு முன்பாக பொன்னம்பல மேட்டில் மகர விளக்கு எனும் தெய்வீக ஒளி காட்சியளிப்பதாக வயதான பெரியவர்கள் யாரும் சொன்னதில்லை. 1940க்குப் பிறகே இந்தக் கதை பரவியது” என்கிறார் ஜோசப் எடமருகு. இவர் கேரளாவைச் சேர்ந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத் தலைவர்.

மகரஜோதி எப்போது முதன்முதலில் அம்பலப்படுத்தப்பட்டது என்பதை சபரிமலை அய்யப்பன் - உண்மையும் கதைப்பும் என்னும் நூல் எடுத்துக் காட்டுகிறது.

“1940-களுக்குப் பிறகு பரப்பப்பட்ட மகர விளக்கின் தெய்வீகக் கதையை முதன்முதலாக உடைத்துக் காட்டியவர் பகுத்தறிவாளர் சங்கத்தின் தீவிர பணியாளரான எம்.ஆர்.எ ஸ். நாதன் தான். அவர் எழுதிய ‘சபரி மலையும் மகர விளக்கும் சூஷணோபாதிகள்’ என்ற நூலை 1974 ல் நாங்கள் கோட்டயத்திலிருந்து வெளியிட்டோம்.

கேரள பகுத்தறிவாளர்கள் மகரஜோதி மடமையைத் தோலுரித்த போதும் அய்யப்ப சேவா சங்கமும் தேவஸ்வம் போர்டும் பொய்ப் பிரச்சாரங்களைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

1990ஆம் ஆண்டு பகுத்தறிவாளர்களின் உண்மை விளக்கப் பேரணி தொடர்பான பிரச்சினையின் போது, அன்றைய கேரள முதலமைச்சர் ஈ.கே. நாயனார், “தேவஸ்வம் போர்டுதான் மகரஜோதியை ஏற்றுகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த விஷயம் தான், பகுத்தறிவாளர்கள் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லும் பேரணியை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

கடவுளின் பெயரால், ஒரு புரட்டு காலம் காலமாக நடந்து வருகிறது. அதை ஆதாரபூர்வமாக பகுத்தறிவாளர்கள் நிரூபிக்கிறார்கள். இதற்குப் பின்னும் சபரிமலை சாஸ்தாவை நோக்கிச் சென்று தம் பொருளையும், அறிவையும் இழக்கும் பக்தர்களை என்னவென்பது?
Source: Unmaionline
--------------------------

Is Sabari Light Man made? He wants to know.People should be told the truth, court tells govt. (The Times of India 21.1.2011 பக்கம் 1)

சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா? இந்த உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், கோபிநாத் ஆகியோர் நுணுக்கமான கேள்வியை எழுப்பியுள்ளனர்.

வழக்கம்போல இவ்வாண்டும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் சென்றனர் (14.1.2011) மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது நள்ளிரவில் புல்மேடு எனும் இடத்தில் கடுமையான பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது.

அதில் 102 பேர் பரிதாபகரமான முறையில் சாகடிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இது தொடர்பாக கேரள மாநிலம் காவல்துறை, வனத்துறை, திருவாங்கூர் தேவஸ்தானம் ஆகிய மூன்று துறைகளுக்கும் கேரள உயர்நீதிமன்றம் தாக்கீது அனுப்பியது.

மூன்று துறையினரும் விளக்கம் அளித்தனர். திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் வழக்குரைஞர் பரனேஸ்வர் கூறியதாவது: வானத்தில் தோன்றும் புனிதமான தெய்வீக நட்சத்திரங்களில் ஒன்றாக மகர ஜோதி கருதப்படுகிறது.
அது புனிதமானது என்பது போன்ற எந்தவிதமான விளம்பரத்தையும் தேவஸ்வம் போர்டு செய்வது கிடையாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்

மிகவும் ஜாக்கிரதையாக இவர் கூறியுள்ளது கவனிக்கத்தக்கது; பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அப்படியும் இப்படியுமாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்.

நீதிபதிகள் கேட்ட கேள்வி என்ன? மகரஜோதி தானாகத் தோன்றுகிறதா, அல்லது மனிதர்களால் தோற்றுவிக்கப் படுகிறதா என்பதுதான் கேள்வி.

ஆம் என்று சொல்ல வேண்டும்; அல்லது இல்லை என்று சொல்ல வேண்டும்; மாறாக என்ன செய்கிறார்? சொதப்புகிறார் (அதற்குப் பெயர்தானே பக்தி?)

தெய்வீகமானதாக மகரஜோதி கருதப்படுகிறதாம்; அதே நேரத்தில் அது புனிதமானது என்பது போன்ற எந்தவிதமான விளம்பரத்தையும் தேவஸ்வம் போர்டு செய்வது கிடையாதாம்.

தெய்வ ஜோதி என்று அரசு கருதும் பட்சத்தில் அவ்வாறு விளம்பரம் செய்யத் தயாராக உள்ளது என்பது இந்தப் பதிலில் அடங்கிக் கிடக்கிறது. ஏன் விளம்பரம் செய்யவில்லை? அது தெய்வீக ஜோதி என்று அரசு கருதவில்லை; அதனால் விளம்பரம் செய்யவில்லை என்பதுதானே உண்மை!
The Times of India 21.1.2011 பக்கம் 1

இந்த மகர ஜோதி என்பது ஒரு மோசடி _ பித்தலாட்டம் -_ தானாகத் தோன்றுவது கிடையாது. கேரள மின்வாரியத் துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் திருகுதாளம் என்பதை கேரளப் பகுத்தறிவாளர்கள் இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் சென்று நிரூபித்துக் காட்டி விட்டார்களே.

அவர்களின் கண்டுபிடிப்பைப் பட விளக்கத்துடன் பிளிட்ஸ் ஏடு விலாவாரியாக வெளியிட்டதே (16.1.1982 பிளிட்ஸ்)

பிளிட்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்: மகரஜோதி கேரளாவில் சபரிமலை கோயிலின் எதிர்புறமுள்ள 2000 அடி உயரமுள்ள மலையில் சமதரையில் குளிர்காலமான டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தோன்றுமாம்.

இந்தக் கேலிக்கூத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் பகுத்தறிவாளர்கள், இதன் பின்னணி என்ன? என்பதைப் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார்கள்.

மகர விளக்கு என்று சொல்லப்படும் வெளிச்சத்தைக் கடந்த 10 வருடங்களாக உண்டாக்கிய மனிதனை கேரளப் பகுத்தறிவாளர்கள் கண்டு பிடித்துவிட்டனர்.

அவர் பெயர் கோபி. இவர் கேரள மின்துறையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தைப் பானையில் நிரப்பி, அதை கொளுத்தி, கொழுந்துவிட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்கிறார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் சிறிய மகரஜோதி, புனித ஜோதி என்பதெல்லாம், பந்தங்களின் ஒளியும், பட்டாசுகளின் ஒளியும், சத்தமும் ஆகும் என்பது வெட்ட வெளியாகியிருக்கிறது.

இந்தப் புரட்டை கேரள பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். யாரும் அணுக முடியாத அந்தப் பொன்னம்பலமேடு என்ற இடத்தை மாட்டு வண்டியில் பயணம் செய்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவித்த பிறகே பகுத்தறிவாளர்கள் அடைந்தார்கள்.

அங்கே சென்றபோது வியப்பு காத்திருந்தது! 500 பேர் அங்கே குழுமியிருந்தனர். அரசாங்கத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஜீப்களும், தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தார்கள். இதிலிருந்து அரசாங்கமே இந்த ஏமாற்று மோசடியை பின்னணியில் இருந்து இயக்குகிறது என்பதை அறியலாம்.

அவர்களின் ஆலோசனைப்படி கோபி என்கிற கோபிநாதன் (கேரள மாநில மின்துறையின் ஓட்டுநர்) பானையில் உள்ள சூடத்தைக் கொளுத்தி, பக்தர்கள் ஜோதியை தரிசிக்கக்கூடி காத்திருக்கும் சபரிமலை இருக்கும் பக்கத்தில் மூன்றுமுறை தூக்கிக் காட்டுவாராம் (கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஓட்டுநர் தான் இந்த மோசடியை செய்து வருகிறார். அனுபவம் காரணமாக இந்தத் தொழிலுக்கு தொடர்ந்து அவரே நியமிக்கப்பட்டு வருகிறார்).

1979-_ஆம் வருடம் இந்த மகரஜோதி தோன்றவில்லை. மகரஜோதிக் கடவுள் வேறு எங்காவது முக்கியமான வேலையில் ஈடுபட்டது இதற்குக் காரணமல்ல; கோபி என்ற கோபிநாத நாயர் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லாததே காரணமாகும்.

இந்த மகரஜோதி கேலிக்கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கியதாகும். கேரள மின்துறை பம்பா திட்டத்திற்காக காடுகளை அழிப்பதற்கு முன்பு காடர், மலையர் என்ற மலை வாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்கவும், மாமிசத்தை வேக வைக்கவும் நெருப்பை உண்டாக்கினர்.

ஆனால், இந்த வெளிச்சத்தை சபரிமலையில் உள்ள கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டும் கூட்டம் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பணம் திரட்டும் வழியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதை மகர ஜோதி என்றனர். அதன்பின் ஒரு மோசடிக் கூட்டம் இத்தகைய ஒரு மோசடியைத் திட்டம் போட்டுச் செய்து வந்தது.

கேரள பகுத்தறிவாளர்கள் கழகம் கேரள அரசுக்கு இந்த மோசடியை அம்பலப்படுத்தி விசாரணைக் கமிஷன் வைக்கவேண்டுமென்று கோரிக்கை விட்டார்கள்.

ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோரிக்கை மனு தூக்கி எறியப்பட்டுவிட்டது. எளிதில் ஏமாறும் அப்பாவி மக்கள் சபரிமலைக்கு வந்து ஜோதி தரிசித்து ஏமாறும், ஏமாற்று வித்தை நாடகம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. (பிளிட்ஸ் 16.1.1982).

தெகல்கா இதழ் தரும் தகவல்கள்
தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) இதுபற்றி என்ன கூறுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்: எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தெகல்கா இதழ் வெளிப்படுத்தும் உண்மைகள்.
இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர்.

கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.
பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர்.

1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ்வரரு, ஆமாம், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமாம் என்று ஆமோதித்துவிட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ன கூறுகிறது?
இது நாள்வரை தெய்வீக அற்புதம் என்று கருதி வரப்பட்ட, புகழ் பெற்ற, சபரிமலை மகர விளக்கு, மனிதரால் ஏற்றப்படுவதுதான் என்று இறுதியாக சான்றளிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மக்களை பரவசப்படுத்தி வந்த, ஆண்டுதோறும் மகர மாத முதல் நாள் அன்று மூன்று முறை ஒளிவிடும் ஒளிப் பிழம்பிற்குப் பின்னால் தெய்வீகத் தன்மை கொண்டது எதுவுமில்லை என்று கோயில் பரம்பரை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் கோயில் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.சுதாகரன் இருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

மூட நம்பிக்கையின் சாயல் சிறிது இருந்தாலும், அதனை எதிர்த்துப் போராடுவது என்பது அலைபோல பெருகிவரும் இந்த நேரத்தைவிட இந்த அறிவிப்புக்கு வேறு நேரம் பொருத்தமாக இருக்க முடியாது.

கேரளாவில் பொதுமக்களின் பெரும் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் மகர விளக்கைப் பற்றிய இந்த அறிக்கை பாராட்டத்தக்கதே.

மூட நம்பிக்கையின் கடைசிக் கோட்டை இடிந்து விழுந்ததற்காக அல்ல இந்தப் பாராட்டு; இந்த மகர விளக்கு நிகழ்ச்சியில் அரசுக்கும் பங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட நேர்மைக்குத்தான் இந்தப் பாராட்டு.

மகர தொடக்க நாளுக்கு தெய்வீக மதிப்பைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மகர விளக்கு நிகழ்ச்சி ஒரு ஆன்மிக மோசடியே என்று பரவலாக மக்களாலும், குறிப்பாக பகுத்தறிவாளர்கள், நாத்திகர்களாலும் வெளிக்கொண்டு வர முயன்ற பல முயற்சிகள் காவல் துறையினராலும், வனத் துறையினராலும் காட்டுத்தனமாக நசுக்கப்பட்டன.

தினமலர் சொல்லுவது என்ன?
இந்த மகர விளக்கு பொன்னம்பலம் மலைப் பகுதியில் மூன்று முறை ஒளிர்ந்து மறையும். இதைக் கண்ட பின்புதான் அய்யப்பப் பக்தர்கள் வீடு திரும்புவர். மலைப் பகுதியில் தெரியும் இந்த மகர விளக்குத் தரிசனம் இயற்கையானது என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், அந்த விளக்கு ஒளிரும்போது சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் அந்தப் பகுதியையே அதிர வைக்கும்.

ஆனால், இந்த மகர விளக்கு இயற்கையானது அல்ல; செயற்கையானது. தேவஸ்வம் போர்டு அதிகாரிகளால் ஏற்றப்படுகிறது என, இக்கோயில் தலைமைத் தந்திரியின் குடும்பத்தினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும் தெரிவித்துள்ளனர். (தினமலர், 29.5.2008)

இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு சார்பில் கோயிலில் நடக்கும் இந்த மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே.நாயனாரிடம் கூறியதாக ஜோசப் எடமருகு கூறினார். (ஜோசப் எடமருகு பேட்டி, விடுதலை 21.2.1993)

டில்லியில் இருந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தில் தலைவர் ஜோசப் எடமருகினை நேரில் அழைத்தவரே _ டில்லிக்கு வந்திருந்த கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார்தான்; அப்பொழுதுதான் இதுபற்றிக் கூறினார்.

மகர ஜோதி மோசடிதான். எங்களுக்கே தெரியும். அந்த இடத்திற்குப் போக முயற்சிக்க வேண்டாம் என்று கூறினர் என்று எடமருகு பேட்டியில் பதிவு செய்துள்ளார் (விடுதலை 21.2.1993 பக்கம் 1)

மத சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெரியாதா? தெரிந்துதானே வினாவைத் தொடுத்துள்ளார்கள்.

மகரஜோதி உண்மையானதுதானா? மனிதர்களால் காட்டப்படுகிறதா? என்று நீதிபதிகளே கேட்ட பிறகு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஒரு மார்க்ஸிஸ்ட் முதல் அமைச்சர் மகர ஜோதி மோசடியை அம்பலப்படுத்திட முன் வந்திருக்க வேண்டாமா?

இந்த மகரஜோதி மோசடி காரணமாகத்தானே கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா?
________________________________________
மகர ஜோதி அற்புதமா? மோசடியா?
ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தோன்றும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று கூறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வழிபடுவது வழக்கம். இது தெய்வச் செயலால் தோன்றும் ஜோதி என்றே இது வரை கதைக்கப்பட்டு வந்தது.

இந்த ஜோதி தோன்றும் ஒரு சில நிமிட நேரத்திற்கு கூடியிருக்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி வெறியுடன் சாமியே சரணம் அய்யப்பா என்று ஒன்று போலக் குலவையிடுவர். சிறிது நேரத்தில் ஜோதி மறைந்ததும் அமைதி திரும்பிவிடும்.

இந்த மகரஜோதி நிகழ்ச்சியினால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நல்ல வருமானம். கடந்த பத்து ஆண்டுகளில் போர்டின் வருமான உயர்வுக்கு இந்த மகரஜோதியும் ஒரு காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சபரிமலை வருகின்றனர்.

இந்த மகரஜோதி மனிதர்களால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்றப்படுகிறது; இது தெய்வ அருளால் தோன்றுவதல்ல; இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலையே என்று பகுத்தறிவாளர்கள் கூறிவந்தது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; செயற்கையாக மனிதர்களால் ஏற்றப்படுவதே என்று அண்மையில் தேவசம் போர்டும், கேரள சமய அறநிலையத் துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டனர். என்றாலும் இந்த மகரஜோதி நிகழ்ச்சியை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை.

பொய்ம்மையையே வைத்து வியாபாரம் செய்து வரும் மத வியாபாரிகள் அவ்வளவு எளிதாக தங்கள் வியாபாரத்தைக் கைவிடுவார்களா?
(ஆதாரம்: The Illustrated Weekly of India, 15 (1987)

அய்யப்ப மூட பக்தர்களுக்கு இனியாவது புத்தி வருமா?
“மகர விளக்கு மனிதன் ஏற்றுவதுதான் கடவுள் சக்தி ஒன்றும் கிடையாது:” -சபரிமலை தந்திரி ஒப்புதல்.

பொன்னம்பலமேடு பித்தலாட்டம் அம்பலம்!
கேரள மந்திரியும் கூறுகிறார்.

மோசடியை அரசு தடை செய்யுமா?

திருவனந்தபுரம், மே 29 2008- ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்த அய்யப்பன் பொம்மையை வைத்துக் கோயில் கட்டிக் கும்பிடும் சபரிமலைக்கு சற்றுத் தூரத்தில் பொன்னம்பலமேடு எனும் காட்டுப் பகுதியில் பொங்கல் நாளன்று மூன்று முறை தீ எரிந்து அணையும்.

இதை மகரவிளக்கு என்று கூறி, தெய்வாதீனமாக இது நடப்பதாகப் புளுகி, மக்களை ஏமாற்றி, அவர்களின் கடவுள் நம்பிக் கையை மலிவான முறையில் முதலீடாக்கி சபரிமலை கோயிலும், குருக்களும், கேரள அரசுகளும் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

புத்தியை இழந்து பக்தியில் ஆழ்ந்த, மூட பக்தர்கள் லட்சக்கணக்கில் சபரிமலைக்குச் சென்று வருவதன்மூலம் கேரள தேவஸ்வம் போர்டுக்கும், கேரள அரசுக்கும் கோடிக் கணக்கில் வருமானம் ஆண்டு தோறும் குவிந்து வருகிறது.

இதை இழக்க விரும்பாத இவர்கள், இந்த மோசடியை நீடிக்க அனுமதித்து வந்தார்கள். கேரளப் பகுத்தறிவாளர்களும், நாத்திகர்களும் இந்த மோசடியை அம்பலப்படுத்திய போதெல்லாம் அவர்கள்மீது காவல்துறை அடக்குமுறையும், சட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வந்தது.

கேரள மின்வாரிய ஊழியர்களின் கூட்டு மோசடியால் பொன்னம்பலமேடு காட்டுப் பகுதியில் நெருப்பைக் கொளுத்தி, மகரவிளக்குப் பித்தலாட்டம் நடந்துவந்த நிலையில், பகுத்தறிவாளர்கள் அதற்கு எதிர்த்திசையில் நெருப்பைக் கொளுத்தி எதிர்நடவடிக் கையில் ஈடுபட்டனர்.

அத்துடன் மட்டுமல்லாது, கேரள மின்வாரிய ஊழியர்கள் நெருப்பைக் கொளுத்துவது, அவர்களின் ஜீப் வண்டி அருகில் நிறுத்தப்பட்டிருப்பது ஆகிய ஒளிப்படங்களையும் வெளியிட்டு உண்மையை நிலை நிறுத்தினர்.

காங்கிரசுக் கட்சி கேரளாவை ஆண்ட காலத்தில், 10 ஆண்டுகளுக்கு முன்பு, சட்ட மன்றத்தில் இதுபற்றிக் கேள்வி வந்தபோது, முதலமைச்சர் கருணாகரன் இதை ஒப்புக் கொண்டார்; மக்களின் மத நம்பிக்கையைப் பாதிக்கும் என்பதால், அரசு ஒன்றும் செய்வதற்கில்லை என்று பூசி மொழுகி விட்டார்.

ஈ.கே. நாயனார் கேரள மாநில முதலமைச்சராக இருந்த போது, கேரள பகுத்தறிவாளர்கள் அவரை நேரில் சந்தித்து விவாதித்தபோது, நீங்கள் சொல்வது உண்மைதான்; மின்வாரியத்தைச் சேர்ந்தவர்கள் தான் செயற்கையாக தீபம் காட்டுகிறார்கள் ஆனாலும், தடை செய்ய முடியாது என்று கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், மகர விளக்கு தெய்வீகச் செயலல்ல; மனிதனின் செயல் தான் என்று சபரிமலை குருக்களான கண்டரேறு மகேஸ் வரரு ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார்.

கேரள அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதாகரன் இதனை ஏற்றுக் கொண்டுள்ளார். கேரள அற நிலையக் குழுமத் தலைவர் சி.கே. குப்தன் என்பவரும் இதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அரசு இதைத் தடுக்க எதுவும் செய்ய முடியாது; ஏனென்றால், இது கலவரத்திற்கு ஏதுவாகி விடும் என்று மந்திரி கூறுகிறார். மகரவிளக்கைக் கொளுத்திக் காட்டுவதைத் தடை செய்ய முடியாது என்று தேவஸ்வம் போர்டு தலைவரும் கூறுகிறார்.

இவர்கள் இருவருமே இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியைச் சேர்ந்தவர்கள். சபரிமலை தந்திரி கண்டரேறு மகேஸ்வரரு தன் பெயரன் ராகுல் ஈஸ்வர் மூலம் அளித்த அறிக்கையில் மகர விளக்கு கொளுத்துவது காட்டு மக்களின் பழக்கம் என்பதாகவும், மகரஜோதி என்பது வானில் உள்ள நட்சத்திரம் எனவும் கூறியிருக்கிறார்.

மகர விளக்கு என்பதே பித்தலாட்டம் எனப் பகுத்தறிவாளர்கள் கூறி, அதனைக் கையும், களவுமாகப் பிடிப்போம் என்று அறிவித்து, காட்டுக்குள் நுழையப் போன போது கேரளக் காவல் துறையும், வனத் துறையும் சேர்ந்து கொண்டு அவர்களைத் தடுத்துவிட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

இதன் மூலம் பித்தாலட்டத்திற்குத் துணைபோன குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர். தற்போது சபரிமலை தந்திரியே ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ள நிலையில், பக்தர்களுக்கு அறிவுத் தெளிவைத் தரவேண்டியது மதச் சார்பற்ற மாநில அரசின் கடமை அல்லவா?

ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டியதும் அரசின் கடமையல்லவா? அதைச் செய்வதில் தயக்கம் காட்டக் கூடாது என்பதுதான் பகுத்தறிவாளர்களின் எதிர் பார்ப்பு. viduthalai.news
----------------------------
அய்யப்பன் கதை கேளுங்கள்!
சாமியேய்ய்ய்ய்ய்ய்........ ச..... ர...... ண......ம் அய்யப்பா...............

கார்த்திகை மாதம் பிறந்தால் இந்தச் சத்தம் காதைக் கிழிக்கும்.
அத்து மீறி நம் அமைதியைக் கெடுக்கும்.
இந்தக் கூச்சல் கடந்த 50 ஆண்டுகளாகத்தான். அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான்.

இந்த கேரள இறக்குமதி, பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தையும் பதம் பார்த்தது. நவம்பர், டிசம்பரில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த நவம்பர் வரையிலும் நீள்வதும் உண்டு. பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, கேரளாவின் இயற்கையை ரசிக்க சபரிமலைப் பயணம் ஒரு சாக்காகப் போய்விட்டது. அதைப் பார்த்த பாமரனும் கடன்பட்டான்.

எதிலும் புதியதைத் தேடும் மனித மனம் கடவுளிலும் புதியதைத் தேடியதன் விளைவே அய்யப்ப தரிசனம். தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பிழந்தனர். மலையாளக் கடவுளுக்குக் கொண்டாட்டம்.

மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார். “குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் ‘பவர்’ குறைந்துவிட்டதா?” என்று.

நாற்பத்தெட்டு நாள் விரதம், காலில் செருப்பணியக் கூடாது, உறவினர் யாராவது இறந்தால்கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. பக்தி உறவுகளைக் கூட பிரித்தது.

இந்த அய்யப்பசாமி வேடம் பூண்டால் நாற்பத்தெட்டு நாள் நல்ல உணவு கிடைக்கும். வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி... சாமி... என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள்.

தண்டச்சோறுகளுக்கு கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவு. இவைதான் அய்யப்பன் மக்களுக்குத் தந்தவை. உழைக்கத் தூண்டும் கடவுள் என ஒன்றுகூட இல்லை; எல்லாம் பணம் பிடுங்கும் கடவுளர்தான்.

தமிழர்களின் செல்வம் பக்தியின் பேரால் திருப்பதி உண்டியல் மூலமாக ஆந்திராவிற்கும், மூகாம்பிகை கோயில் மூலமாக கர்நாடகாவிற்கும், அய்யப்பன் கோவில் மூலமாக கேரளாவிற்கும் செல்கிறது.

சபரிமலை தரிசனம் பற்றி இந்த ஆண்டு வந்த ஒரு செய்தி. அய்யப்பன் கோயில் படிபூஜைக்கு முன்பதிவு 2013 ஆம் ஆண்டு வரை முடிந்து விட்டதாம். இந்த சிறப்பு படி பூஜைக்கு கட்டணம் ரூ. 25,001.

இப்படி முன்பதிவு செய்துள்ளவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாம். அதற்கு அடுத்தபடியாகத்தான் ஆந்திர, கர்நாடக, கேரள பக்தர்கள் உள்ளார்கள்.

தமிழன் எவற்றிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறான் பார்த்தீர்களா? சரி...


அந்த அய்யப்பன் கதைதான் அவ்வளவு ஒழுக்கமானதா?

இதுபோக சபரிமலைக்கு கூட்டம் சேர்க்க ஏராளமான குட்டிக் கதைகளையும் சொல்வார்கள். காடு-புலி என்றெல்லாம் புருடா வேறு. உடலை வருத்திக் கொண்டு, பொருளை இழந்து சபரிமலைக்குச் செல்ல வேண்டுமா என்ற ஓர் அக்கறையில் கேள்வி கேட்டால் உடனே பதில் வரும்.

என்ன சாமி இப்படிக் கேக்குறீங்க. சின்ன பாதை பெரிய பாதை எதுல நடந்தாலும் உடலுக்கு நல்லது. காலையில வேகமாக எந்திரிச்சு குளிச்சு சுத்த பத்தமா இருந்தா உடம்பு புத்துணர்ச்சியாக இருக்கும். எல்லாம் ஒரு காரணமாத்தான் இந்த சடங்கெல்லாம் என்பார்கள்.

சடங்கு - சம்புரதாயங்களெல்லாம் இப்படி உடலைப் பயிற்சிக்கு உட்படுத்தியிருந்தால் இந்தச் செய்தி ஏன் வருகிறது?

படியுங்கள்:

அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 4 கி.மீ. தூரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.

இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு பம்பை-நீலிமலையேற்றம். அப்பாச்சி மேடு -சபரிமலை நடைபாதயில் 12 இடங்களில் ஆக்ஸிஜன் சுவாச மையங்களை அமைக்க முடிவு செய்தது. இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம்.

அய்யப்பனால் எதுவும் ஆகாது. துளிகூட பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா?காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது ரசிகர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா?

அய்யப்பன் கதையும் அறிவுக்குப் பொருந்தாதது; தற்கால நடப்பும் எந்தப் பயனையும் தராது. இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா?

கடவுள் பக்தி எப்படி குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டினார் தங்கர்பச்சான். அய்யப்பன் ரசிகர்களே நீங்கள் இன்னும் திருந்தாத அப்பாசாமிகள் தானா? - அறிவகம்

SOURCE: http://arivagam.blogspot.com/

தொடர்புள்ள‌ இதையும் படியுங்கள்.

1.பகுதி 82 – 2 to 84. சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள். அடங்காகாம சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த அய்யப்பன். சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார் பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.

2.திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்? திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.

5 comments:

 1. Great Collections. If you have any photo evidance released on 1982, this will become more good.

  ReplyDelete
 2. aaha thalai suththudu arumaiyana collection

  ReplyDelete
 3. அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

  தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

  அன்புடன்,

  வலைச்சரம் நிர்வாகம்.

  ReplyDelete
 4. எல்லாம் ஓகே தான் , மகர ஜோதி 100% போலிதான் GREAT JOB...
  ஆனா... ஒரு விசயம்தான் ஓதக்கிது
  உங்களை நீங்களே பகுத்தறிவு வாதி என்று அழைப்பது எந்த அளவு பகுத்தறிவானது என்பதுதான் விளங்குதில்ல...

  ReplyDelete
 5. nalla padhivu nandri
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete