Saturday, December 11, 2010

பஞ்சாங்கம் பார்த்தா உடலுறவு?

முகூர்த்த நாளில் மணம் முடித்தால் தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?
முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்.

முகூர்த்த நாள் என்றால் போக்குவரத்து நெரிசல் மட்டுமா? மாதத்தில் ஒருசில நாட்களே முகூர்த்த நாட்கள் என்பதால் பலருக்குத் திண்டாட்டம். சிலருக்கோ கொண்டாட்டம்.

முகூர்த்த நாள் என்றால் ஆட்டோ-வேன்களுக்கு கிராக்கி, காய்கறிக்கு கிராக்கி, பாலுக்கு கிராக்கி, மல்லிகை-முல்லை மலர்களுக்கு கிராக்கி, இசைக்கச்சேரி நடத்துவோருக்கு கிராக்கி, மேடை ஜோடனைக்காரருக்கு கிராக்கி, சமையல் காரருக்கு கிராக்கி, எல்லாவற்றிற்கும் மேலாக ஐயருக்கு கிராக்கி என எல்லாமே கிராக்கியாகி விடுகிறது.

புதுமனை புகு விழா போன்ற வேறு சில விழாக்கள் முகூர்த்த நாளில் வந்து விட்டால் கிராக்கியெல்லாம் படுகிராக்கியாகிவிடும்.

ஆறு மாதத்தில் வரன் பார்த்து முடித்தாலும் மண்டபத்திற்காக மேலும் ஆறு மாதம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இத்தனை நெருக்கடிகளுக்கும் என்ன காரணம்? முகூர்த்த நாள் பஞ்சம்தானே. இந்த ஆண்டு மொத்தமே 55 நாட்கள்தான் முகூர்த்த நாட்கள் என ஒரு பஞ்சாங்கம் வரையறுத்திருக்கிறது. ஆடியிலும், மார்கழியிலும் முகூர்த்தமே கிடையாது.

இந்த ஒரு பஞ்சாங்கம் மட்டுமே 'அத்தாரிட்டி' கிடையாது. வேறு சில பஞ்சாங்கங்களில் ஒரு சில நாட்கள் மாறுபடலாம். அனால் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இதே அளவு எண்ணிக்கையில் தான் முகூர்த்த நாட்கள் தீர்மானிக்கப்படுகின்றன.

முகூர்த்த நாட்களில் எல்லா நேரத்திலும் திருமணம் செய்து விட முடியாது. காலை 4.30-6.00, 6.00-7.30, 7.30-9.00, 9.00-10.30 ஆகிய நேரங்களில் மட்டுமே திருமணம் செய்ய வேண்டும்.

பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள முகூர்த்த நாள் மற்றும் நேரத்திலும்கூட ஒருவர் திருமணம் செய்து விட முடியாது. ஜாதகப் பொருத்தம் பார்த்த பிறகே தேதியும் நேரமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவே திருமண நாட்கள் இன்னும் சொற்ப நாட்களாகிவிடுகின்றன.

ஒரு திருமணத்திற்கு சாராசரியாக இரண்டு நாள் என பதிவு செய்தாலும் ஒரு மண்டபம் ஓர் ஆண்டில் 110 நாட்களுக்கு மட்டுமே பயன் படுத்தப்படும். பல லட்சங்களைப் போட்டு மண்டபம் கட்டியவர் 365 நாட்களில எடுக்க வேண்டிய வருமானத்தை 110 நாட்களில் எடுக்க வேண்டும் என்றால் வாடகை எகிராதா என்ன?

முகூர்த்த நாளையும் நேரத்தையும் தவிர்த்து வேரொரு சாதாரண நாளிலும், நேரத்திலும் ஏன் திருமணம் செய்யக் கூடாது? அவ்வாறு செய்தால் என்னவாகும்?

கட்டுக்கடங்காமல் திரியும் காளைக்கு ஒரு கால் கட்டு போடுவதற்கா திருமணம்?

உழைத்துக் கொட்டவும், வருமானம் ஈட்டவும் கூடுதலாக ஒரு பெண்ணை கொண்டு வருவதற்குமா திருமணம்? மேலோட்டமாக பார்க்கும் போது இப்படிப்பட்ட காரணங்கள் உண்மை போலத் தோன்றும்.

ஆனால் இயற்கை விதிகளின் படி திருமணத்தால் ஏற்படும் விளைவு இனப் பெருக்கமும், விலங்கினங்களுக்கே உரிய பாலியல் தேவையை பூர்த்தி செய்து கொள்வதுமேயாகும்.

இந்த விசயத்தில் பிற விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. மனித சமூகம் நாகரிகக் கட்டத்தை அடைந்துள்ளதால் சமூக ஒழுங்கு கருதியே ஒருத்திக்கு ஒருவன் என்ற கோட்பாடும் ஊரறிய திருமணம் என்ற நிகழ்வும் நடத்தப்படுகிறது.

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்.


அந்தக் கூட்டம் எதுவாக இருக்கும்? உற்பத்தி மற்றும் உழைப்பில் ஈடுபடாமலேயே சொகுசாய் வாழ்க்கை நடத்தும் பார்ப்பன புரோகிதர் கூட்டம்தானே!

இந்தக் கூட்டம், சட்டத்திற்கும் மேலாக உட்கார்ந்து கொண்டு கோலோச்சுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.

சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட அரசாங்கம் போட்டுள்ள பல சட்டங்களை மீறுவதற்கு மனிதன் தயங்குவதில்லை.

வரதட்சணை வாங்குவது சட்டப்படி குற்றம் என்றாலும் வாங்காமல் இருக்கிறானா?

கையூட்டு வாங்குவது குற்றம் என்றாலும் வாங்காமல் இருப்பதில்லை. சட்டங்களை மீறினால் தண்டனை என்றாலும் மீறுவதற்குத் தயங்குவதில்லை.

ஆனால் முகூர்த்த நாளும் நேரமும் சட்டமாக்கப் படவில்லை. இவற்றை மீறினாலும் யாரும் தண்டனை வழங்கப் போவதில்லை. இருந்தும், முகூர்த்த நாளை மீறி வேறு நாளில் மணமுடிக்க முயல்கிறானா?

முகூர்த்த நேரத்தை மீறுகிறானா? அது கலைஞர் தலைமையிலான சீர்திருத்தத் திருமணமானாலும் தலைவர் வர நேரமாகிவிட்டால் முகூர்த்த நேரத்திற்குள் தாலியைக் கட்டிவிடுகிறான்.

பார்ப்பனர்கள் தங்களின் சுய நலத்திற்காக உருவாக்கிய முகூர்த்த நாள்-முகூர்த்த நேரம் எனும் புதை சேற்றில் சிக்கி மீள முடியாமல் தமிழினம் இன்று தவித்துக் கொண்டிருக்கிறது.

இயற்கையாய் நடக்க வேண்டிய நிகழ்விற்கு செயற்கையாய் ஒரு சில குறிப்பிட்ட நாட்களையும், நேரத்தையும் தீர்மானிப்பது இயற்கைக்கு எதிரானதல்லவா!

பஞ்சாங்கம் பார்த்தா விலங்கினங்கள் இனப்பெருக்கம் செய்கின்றன? பாலியல் உறவு கொள்கின்றன?

பிறகு மனிதனுக்கு மட்டும் ஏன் செயற்கையாய் நாள்-நேரம் குறிக்க வேண்டும்? முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளாபிறக்கும்?-- ஆக்கம்: ஊரான்.
THANKS TO: http://hooraan.blogspot

7 comments:

 1. If we subscribe to the views that astrology is true and planets influence human life,then whats wrong in seeing good muhurtha for marriage or conception?On the contrary the objective of a hindu marriage is not sex alone,but to get a good progeny to carry on the tradition of the vedic religion.If for assumption,astrology is true, if the few minutes of sex and copulation is going to determine the future life of the progeny for 60-70 years it makes sense to observe a good muhurtham.Whats wrong in it tell us!

  ReplyDelete
 2. Onrume theriyatha arivu jeevihal irukkuma varai yaar vendumanaalum ippadi patta katturaihalai ezhuthalaam...Ethaiyum theera visaarikkamal pesuvathu pahuththarivalla....

  ReplyDelete
 3. சுட்டிகளை சொடுக்கி தொடர்புள்ள இவைகளையும் படியுங்களேன்.

  1. பகுதி 40. “விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமண‌ங்களில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண்.

  2.பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.

  3. பகுதி 42.. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

  4. பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.

  5. பகுதி 45. மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை --‍ மநு.

  6.பகுதி 46. ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????. எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் இருக்கும் காலம் வரை..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

  7. பகுதி 44 (1) இறந்த கணவனுடன் மனைவியையும் உயிருடன் எரித்துவிடு.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா? வேதம்

  8. பகுதி 44(2) தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். இனியொரு முறை திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

  9. பகுதி 38. இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்... மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.

  10.பகுதி 37. மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

  11. பகுதி 35. பெண் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கவேண்டும்.

  12.பகுதி 29. ஸ்திரிகளுக்கு எதுக்கு சொத்து? ஓடிப்போயீடுவா...!!! ஸ்தீரிகளுக்கு பாத்யமோ சம்பாத்யமோ இருக்கக்கூடாதுன்னு மநு ஸ்மிருதி சொல்லியிருக்கு. ஆம்படையானுக்கு அடிமையாக இருக்கறதுதான் ஸ்த்ரீக்கு அழகு.

  13.பகுதி 28. பெண்களுக்கு கல்வி தேவையில்லை, சொத்தில் பங்கு கிடையாது. ஆணுக்கு அடங்கியிருக்க வேண்டும்..
  ...

  ReplyDelete
 4. The whole articles here are written by someone else and published falsely in the name of Thatachariar to give an authenticity.But the knowledgible will know the duplicity of Nakeeran Gopal

  ReplyDelete
 5. மிக அருமை, இன்னும் எதிர்பார்க்கிறேன் ,உங்களது வலைப்பதிவின் மூலம் தெரியாததை தெரிந்து கொண்டிருக்கிறேன் , மென்மேலும் தொடரட்டும். பதிவரே! தோழரே!

  ReplyDelete
 6. oru uyarntha paniyai seyyum ungalukku emathu idayam kaninth valthukkal.

  ReplyDelete
 7. சமூகத்தை ஏமாற்றி தான் மட்டும் வாழ நினைக்கும் சுயநலவாதி கூட்டததாரின் கயமைத்தனத்தை வெளிப்படுத்தி வரும் தங்களுககு வாழ்த்துக்கள். ஏக இறைவன் தங்களை நேர்வழியில் செலுத்துவானாக!
  AYFA. Gundur

  ReplyDelete