Tuesday, October 19, 2010

சோதிட மூடநம்பிக்கை.

சோதிடம் அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா! கிரகங்களால் பாதிப்பா?

சூரியனை, கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆற்றல் மிக்க சக்தியினால் கிரகங்கள் அனைத்தும் அதன் கட்டுப் பாட்டில் கொஞ்சம்கூட விலகாமல் சுற்றி வருகின்றன. எனவே இதை சூரிய குடும்பம் என்பர்!


சூரியன் தோன்றி 460 கோடி ஆண்டுகள் ஆகிறது. அதற்கு முன்னர் 1000 சூரிய னுக்குச் சமமான தூசியும் வாயும் கொண்ட ஒரு மேகத் திரள் உள் அழுத்தத்தால் அண்டத்தில் வெடித்துச் சிதறியது. அதில் ஒரு துண்டு மேலும் வெடித்து சிதைந்து சூரிய குடும்பமாகத் தோன்றியிருக்கக் கூடுமென்று ஆய்வுகள் கூறுகிறது.

கிரகங்கள் அனைத்தையும் அணைத்து அணி வகுத்து கட்டுப்படுத்திச் செல்லும் ஆற்றல் மிக்க தலை வனாக சூரியன் இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதற்கு சூரியனின் பேராற்றலே காரணம்! ஈர்ப்பு விசை!கிரகங்களுக்கும் துணைக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை உண்டு!

அவைகளின் ஈர்ப்பு விசை அளவு ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபடும். பூமிக்கு மிக நெருக்கமாக துணைக் கிரகம் சந்திரன் இருப்பதால் அதன் ஈர்ப்பு விசை பூமியில் சில பாதிப்புகளை உண்டாக்குகிறது.

மற்றக் கிரகங்கள் எல்லாம் வெகு தொலைவில் இருப்பதால் அவைகளின் ஈர்ப்பு விசை பூமியை எட்டவே எட்டாது!

பூமியின் ஈர்ப்பு விசை கூட வானில் சில கிலோ மீட்டர் தூரம்தான்!

அதுபோல மற்றக் கிரகங்களுக்கும் ஈர்ப்பு விசை சிறிது தூரத்திற்கே இருக்கும்.எனவே கிரகங்களின் ஈர்ப்பு விசையால் பூமியிலுள்ள மனிதர்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட வாய்ப்பேயில்லை!

பூமியும் ஒரு கிரகம்தான்! அதுவும் துடிப்பான உயிர்க் கிரகம். மற்றக் கிரகங்களில் கடுங்குளிர், கடும் வெப்பம், கரியமில வாயு என்றுதான் இருக்கிறது.

அவைகளிலிருந்து எந்தத் தீங்கு தரும் வாயுவோ - கதிர்வீச்சோ ஈர்ப்பு விசையோ பூமிக்கு வர வாய்ப்பேயில்லை! பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது.

சூரியனில் ஏற்படுவது போன்ற அணுச் சேர்க்கையோ அணு வெடிப்போ கிரகங்களில் கிடையாது. எனவே கிரகங்களிலிருந்து கதிர் வீச்சோ வேறு வகையான காந்த சக்தியோ ஏற்பட்டு மனித வாழ்வை பாதித்து விடுமோ என்ற அச்சத்திற்கே இடமில்லை!

கிரகங்களுக்கிடையே ஈர்ப்பு விசை தவிர வேறு விசைகள் இல்லை என்பதே அறிவியல் ஏற்கும் கொள்கை! என்று தில்லி பல்கலைக் கழக விஞ்ஞானி தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் கிரகங்களால் தனி மனித வாழ்வில் தாக்குதல் ஏற்பட்டு ஏற்றத்தாழ்வை ஏற் படுத்தும் என்று சோதிடம் சொல்வது ஏற்கக் கூடியதேயல்ல!

பூமியில் ஒரு கிரகம்! பூமி ஒரு உயிர்க்கிரகம். இந்த உயிர்க்கிரகத்தால் மற்றக் கிரகங்களுக்கு எப்போதாவது எந்த காலத்திலாவது தீங்கு ஏற்பட்டதா!

உயிர்க்கிரகமான பூமியால் மற்றக் கிரகங்களுக்கு தீங்கேதும் ஏற்படாத போது வறண்டு கிடக்கும் மற்றக் கோள்களால் பூமி கிரகத்திற்கும் மக்களுக்கும் நன்மை தீமை ஏற்படுமென்று கூறுவது அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா!

பூமியின் இன்ன ஆற்றல் அல்லது சக்தி மற்றக் கிரகங்களை இப்படியெல்லாம் பாதிக்கிறதென்றோ அல்லது மற்றக் கிரகங்களின் இன்ன சக்தி பூமியை இப்படியெல்லாம் பாதிக்கிறதென்றோ சொல்லட்டும்!

எனவே சோதிடம் என்பது இல்லாத ஒன்றைச் சொல்லி பிழைப்பு நடத்தப்படுகிறது என்பதை சோதிட நம்பிக்கையுள்ளவர்கள் உணர வேண்டும்!

சில அதிர்வுகள் பூமியில் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று வாதிடு வோரும் உண்டு! அதிர்வு என்பது இரண்டு பொருட்கள் மோதினாலோ அல்லது உயராய்வதாலோ ஏற்படும். பூமியுடன் எந்தக் கிரகமும் மோதாதபோது அதிர்வு ஏற்பட வாய்ப்பேயில்லை!பூமி வினாடிக்கு சுமார் 30 கி.மீ. வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

அதனால்கூட பூமியில் எந்த அதிர்வும் ஏற்படு வதில்லையே! எனவே அதிர்வு பூமியில் மாற்றத்தை உண்டாக்குமென்பது அர்த்தமற்றது.

குறுங்கோள்கள் சூரியனுடைய கட்டுப்பாட்டை மீறி சில குறுங் கோள்கள் விண்கற்கள் விண் வெளியில் சுற்றி வருகிறது. இவைகள் பூமியின் ஈர்ப்பு விசைக்குள் வரும்போது பூமியைத் தாக்கக் கூடும். சுமார் 26 கோடி ஆண்டிற்கு முன் ஒரு முறை குறுங்கோள் ஒன்று பூமியைத் தாக்கியதால் டைனோசர் விலங்கினம் அழிந்து விட்டதாகக் கூறப்படுகிறது.

ஆண்டிற்கு 150 டன் விண்கற்கள் பூமியில் விழுவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நமது சோதிடர்கள் குறுங்கோள் பற்றிக் கூறவில்லை.

பூமிக்கிரகம் நீக்கி மற்றக் கிரகங்களில் ஐந்தை மட்டுமே கணக்கிலெடுத்து மனித வாழ்வை நிர்ணயிப்பதாகக் கூறுகிறார்கள்.

சோதிடர்களின் கூற்று எந்த வகையிலும் ஏற்கக் கூடியதல்ல!

இத்தனை அறிவியல் ஆதாரங்களையும் எடுத்துக் காட்டுக்களையும் ஏற்றுக் கொள்ள மனமில்லாமல் கிரகங்களால் அங்கிருந்து வரும் காந்த விசைகளினால் மனித வாழ்வில் நன்மை தீமை நடக்குமென்று நம்பிக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கு சொல்லிக் கொள்வது என்ன வென்றால்,

சூரியனிலிருந்து தான் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் அணுக்கதிர் வீச்சு, நீலக்கதிர்வீச்சு, எக்ஸ் கதிர் வீச்சு என்று பூமியை இடைவிடாமல் தாக்கிக் கொண்டே இருக்கிறது!

இவ்வளவு ஆற்றல் மிக்க கதிர்வீச்சுகளையே பூமியைச் சூழ்ந்துள்ள, பூமிக்கு கவசமாக அமைந்துள்ள காற்று மண்டலம் தடுத்து நிறுத்தி அவற்றை சின்னா பின்னமாக்கி, பூமியை வந்தடையாமல் செய்துவிடும் போது நீங்கள் நம்புவது போல வலிமை குறைந்த கிரகங்களிலிருந்து வரும் வலிமையற்ற எந்த ஆற்றலும் சக்தியும் காற்று மண்டலத்தைக் கடந்து பூமிக்கு வந்து சேர முடியுமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!

காற்று மண்டலம் ஒரு வடிகட்டி! அதை மீறி நல்ல சக்தியோ தீய சக்தியோ பூமியை வந்தடைய முடியாது என்பதை சோதிட அன்பர்கள் உணர வேண்டும்!-  தி. பொன்னுசாமி
தரவு: சோதிட மறுப்பும் வானவியல்.  SOURCE: viduthalai.com

7 comments:

  1. வணக்கம் பாஸ்,
    எனக்கு சுத்தி வளைச்சு பேசறதெல்லாம் பிடிக்காது. ஒரு டேட் ஆஃப் பர்த் டைம் கொடுங்க. அவிகளோட பயேடேட்டாவை கோவி. கண்ணன் மாதிரி ஒரு பார்ட்டிக்கு அனுப்பிருங்க. நான் ஜாதக ரீதியா அந்த பார்ட்டியோட லைஃபை கெஸ் பண்ணி எழுதறேன். தீர்ப்பை கண்ணன் சாரே சொல்லட்டும். அப்பாறம் ரெண்டையும் தன் வலைப்பூவுல வெளியிடட்டும்.

    நான் இந்த பேட்டையில ரெம்ப சின்ன பையன். டுபுக்கு. பார்ட் டைம். எல் போர்டு.

    ஆனாலும் பரவால்லை மோதித்தான் பார்த்துருவமே .நான் ரெடி நீங்க ரெடியா?

    ReplyDelete
  2. இது நல்லா இருக்கே மோதுங்க, உண்மை வரட்டும்

    ReplyDelete
  3. hi murugesan

    my date of birth is 06-march-1981

    time 8:21pm

    place:kumbakonam

    could you tell about me(atleast my gender)

    ReplyDelete
  4. \\\ பூமி உட்பட கிரகங்கள் அனைத்தும் சூரிய ஒளியையும் வெப்பத்தையும் கிரகித்துக் கொண்டிருக்கிறது ///

    இதை முழுமையாக ஒப்புக்ககொண்டீர்களா?

    பிறகு மறுக்கமாட்டீரே?

    ReplyDelete
  5. hai anonimous, nobody can tell about gender according to horoscop.

    if anybody will tell it must be fluke.

    but tha same time someother points may can.

    ReplyDelete
  6. \\\hi murugesan
    my date of birth is 06-march-1981 time 8:21pm
    place:kumbakonam
    could you tell about me(atleast my gender)///

    ஆனா? பெண்ணா? என்று சொல்வது முடியாது.

    ஆனால் இவரைப் பற்றி இரண்டு தகவல் தருகிறேன்.

    1.இவர் காதல் வயப்பட்டிருப்பார்.

    2. இவருக்கு திருமணம் ஆகவில்லை.
    (திருமணம் ஆகியிருந்தால் தன் துணையிடமிருந்து பிரிந்திருப்பார்)

    மூன்றாவதாக ஓரு தகவல்...

    இவருடைய இரத்த குரூப்-ன் வகை (Rh type) -ve ஆகத்தான் இருக்கும்.

    ReplyDelete
  7. ஞானசூனியன்,
    காதல் வயபடாதவர்கள் உலகத்தில் யார்?

    ReplyDelete