Friday, October 29, 2010

வாஸ்து வுக்கு வைத்தியம் செய்யலாமா?

`வாஸ்து’; `நட்சத்திரம்’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.

Wednesday, October 27, 2010

வாஸ்து சாபமா? வரமா?

வாஸ்து தேவைதானா? வாஸ்து வை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள்
--------------
வாஸ்து - vasudevan.dr

அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!

Tuesday, October 26, 2010

குறிபார்த்தல் கைரேகை பித்தலாட்டங்கள்.

குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.மூடநம்பிக்கைகளில் சிலவற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண்டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன. இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம். சில மூடநம்பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது.

பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஜோதிடம்.

ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!.

மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்று, மழை, இடி, மின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும், மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

Monday, October 25, 2010

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.

Friday, October 22, 2010

13, 8 எண்களை கண்டால் நடுக்கமா?

இதை நினைத்தால் சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை.

பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல்பிகாரி வாஜ்பேயின் மூட நம்பிக்கைபற்றிய செய்தி ஒன்று அவரைப்பற்றிய மதிப்பீட்டை மிகவும் கீழிறங்கச் செய்து விட்டது. முன்னாள் பிரதமரான அவருக்குக் குடியிருப்புக்கு டில்லியில் ஒரு வீடு ஒதுக்கப்பட்டு இருந்தது.

Thursday, October 21, 2010

கொலை செய்ய தூண்டும் ஜோசியர்கள்!

ஜோசியக்காரனின் வார்த்தையைக் கேட்டு இந்த வடிகட்டிய மூடர்கள் பெற்ற பிள்ளைகளை கொள்வதும் மற்றவர்களின் பிள்ளைகளை கடத்தி நரபலிக் கொடுப்பதும் வாடிக்கையாக உள்ளது.

படித்த முட்டாள்களும் இதற்கு விதிவிலக்கல்ல.
சில கேடு கெட்டவர்களால் செய்வினை செய்வதும் சூனியம் பார்ப்பதும் என்பன போன்ற வழிகெட்ட காரியங்களில் அறிவின்றி நம்பி மோசம் போகின்றனர்.

இவர்களை திருத்த வேண்டிய ஊடகங்கள் இந்த கேடான‌ தொழிலை தொடர்ந்து நடத்துவதற்கு துணை போவது கொடுமையானது.

இவர்கள் உங்கள் அறியாமையை பயன்படுத்தி காசு பார்க்கிறார்கள். இவர்களுக்கு பணம் ஒன்று தான் குறிக்கோள்.

படத்தின் மேல் க்ளிக் செய்து பெரிதாக்கி படிக்கவும்.


SOURCE: thanks to " உணர்வு" இதழ்.

14.சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 14

14.சந்யாசிகள் எப்படிஎப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...


மேலும் படிக்க‌..

Wednesday, October 20, 2010

13. ஆதிசங்கரர் யார் இவர்? ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 13

13. ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம் தான் அது.

மேலும் படிக்க..

யோனி பொருத்தம் என்றால் என்ன?

சூத்திரன் என்பவன் யார்?

ஜாதகப் பொருத்தத்தில் யோனி(பெண்குறி)ப் பொருத்தம் என்றால் என்ன? சூத்திரர்களுக்கு யோனிப் பொருத்தம் கட்டாயம் என்கின்றார்கள் ஜோதிடர்கள். - பொருத்தமில்லையே!

யோனி என்றால் பெண்குறி. திருமணப் பொருத்தத்தில் யோனிப் பொருத்தம் சூத்திரர்களுக்கு உரியது என்கின்றார்கள்.

Tuesday, October 19, 2010

12.பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 12

12.பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை

மேலும் படிக்க‌

சோதிட மூடநம்பிக்கை.

சோதிடம் அறியாமையா பித்தலாட்டமா! பிழைக்கும் வழியா! கிரகங்களால் பாதிப்பா?

சூரியனை, கிரகங்கள் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனின் ஆற்றல் மிக்க சக்தியினால் கிரகங்கள் அனைத்தும் அதன் கட்டுப் பாட்டில் கொஞ்சம்கூட விலகாமல் சுற்றி வருகின்றன. எனவே இதை சூரிய குடும்பம் என்பர்!

Monday, October 18, 2010

ஜோதிடர்களும் கோவில் குருக்களும் கூட்டணி கொள்ளை.

கூட்டணி அமைத்துக் கொள்ளை அடிக்கும் இவர்களுக்கு நமது நாட்டின் ஊடகங்கள், பத்திரிக்கைகள் போன்றவைகள் மிகப் பெரிய விளம்பரதாரர்களாக இருக்கின்றார்கள்.

பஞ்சாங்கத்திற்கு ஒரு பாதிப்பு என்றால் பார்ப்பனர்கள் ஏன் இப்படி பதறுகின்றார்கள், பதை பதைக்கின்றார்கள் என்ற கேள்வி எழுகின்றது,

இந்த நாட்டில் நாத்திகர்கள் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை, பஞ்சாங்கம் பார்க்காததனால் பாழாகிப் போய் விடவில்லை.

11. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

இந்து மதம் எங்கே போகிறது ?  பகுதி – 11

11. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

மேலும் படிக்க‌

Friday, October 15, 2010

செத்தவருக்கே ஜோதிடம்சொல்லும் அபாரதிறமை.

புரட்டுகளில் தலையானப் புரட்டு இந்த ஜோதிடப் புரட்டே! ஜோதிடம் என்பது ஒரு நல்ல சுரண்டல் தொழில். மோசடி வியாபாரம். செத்தவருக்கே ஜோதிடம் சொல்லும் அபார திறமையை என்னென்று சொல்வது! ஏமாறுகிறவர்கள் இருந்தால் ஏமாற்றுபவரும் இருக்கத்தானே செய்வார்கள்?

இதனை, நல்ல `முதல் இல்லாமூட நம்பிக்கை வியாபாரமாகச் செய்து செழித்து வருகின்றனர் பலர் பல தலைமுறைகளாக!

பிராமணர்களால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்..

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர் பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?

ஆனால் அதுதான் உண்மை.

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்

மேலும் படிக்க‌

Thursday, October 14, 2010

10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ள‌உறவு கொண்டால் ?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 10

10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ள‌உறவு கொண்டால் ?

தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம்.

பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.


மேலும் படிக்க‌..

கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

மூடநம்பிக்கை -- கம்ப்யூட்டர் ஜாதகம் கணிப்பது எப்படி?

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும், என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டி விடுவார்கள் தமிழர்கள்!
எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!

Wednesday, October 13, 2010

9. ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.

இந்து மதம் எங்கே போகிறது பகுதி 9.

9. தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு. யார்  சண்டாளர்கள்? தலித் துகள் சண்டாளர்களாம்.

துரோகம் செய்தவனை கொலை பாதகனை பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால்மநு யாரைச் சொல்கிறது தெரியுமா

மேலும் படிக்க‌..

நாடி ஜோதிட புரட்டு.

நாங்கள் ஜோதிடத்தை நம்புவோம் என்றால் என்ன பொருள்? நாங்கள் எங்களை நம்பவில்லை, நாங்கள் அறிவியலை நம்பவில்லை, நாங்கள் அறிவை நம்பவில்லை என்று தானே பொருள்.

இங்கு ஜோதிடம் பார்க்கப்படும் என்ற பலகையைக் கண்டால் போதும், உடனே கையை நீட்டிவிடுவார்கள் தமிழர்கள். எதிர்காலத்தைத் தெரிந்து கொள்வதில் அவ்வளவு ஆர்வம் அவர்களுக்கு!

Tuesday, October 12, 2010

8. திருமண சடங்குகளின் விளக்கங்கள்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 8

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம்.

எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி’ என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை’ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.  

மேலும் படிக்க‌..

Monday, October 11, 2010

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1கோடி பரிசு

ஜோதிடம் உண்மை என நிரூபித்தால் ரூ. 1 கோடி பரிசு! ஜோதிடத்தை ஆராய்ந்த பேராசிரியர் சவால்!!

ஆயிரம் பெரியார்கள் வந்தாலும் திருத்த முடியாத அளவுக்கு ஜோதிடம், வாஸ்து, எண்கணிதம், பெயரியல், நாடி ஜோதிடம், சோழி உருட்டுதல், குறி சொல்லுதல் எனப் பலவேறு முகங்களில் மக்களை மூளைச் சலவை செய்து பணம் கறந்து வருகிறார்கள் ஜோதிட சிகாமணிகளும், பூஷணங்களும்.

7.பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 7

7. `தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.

"நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” இன்னும் இருக்கு!!!


மேலும் படிக்க‌

சோதிடத்தை நம்பிக் கெட்டவர்கள்!

சோதிடர் சொல்லுகிறபடி நடக்காத போது ஏன் சோதிடத்தை நம்ப வேண்டும் - பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும்?

சோதிடத்தை முழுமையாக நம்பிக் கொண்டு அன்றாட வாழ்வில் ஒவ்வொரு செயலுக்கும் சோதிடத்தின் வழிகாட்டலோடு தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருப்பவர்கள் நாட்டில் நிறைய பேர் உண்டு!

அப்படி சோதிடத்தை நம்பி வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் வாழ்வு சோதிடர் சொன்னபடி சிறப்பாக அமைந்ததா?

Saturday, October 9, 2010

படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்டுமா?

குரோர்பதி ஜோசியர்கள். படிக்காமல் கோடீஸ்வரனாக வேண்டுமா? கிளி ஜோஸ்யம் பாருங்கள்.

குரோர்பதி ஜோசியர்கள் என்ற தலைப்பில் 5.11.2008 குமுதம் வார இதழில் வெளியான கட்டுரையை இங்கே தந்துள்ளோம்:

தாம்பரத்துல சொந்த வீடு இருக்கு சார். ரெண்டு பொம்பளைப் புள்ளைங்க. ஒரு வழியா கல்யாணமும் முடிஞ்சுது. கிண்டியில் ஏதோ லீ மெரிடியன் ஓட்டலாம். மூத்தவனுக்கு அங்கதான் வேலை. இன்ஜினீயரிங் காலேஜ்ல கடைசிப் பையனுக்கு இது ஃபைனல் இயர்.

Friday, October 8, 2010

தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 6

6. தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்

தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.

இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

மேலும் படிக்க‌