Sunday, January 30, 2011

சிக்கிய ஜோதிட, சித்த, மருத்துவ, மாந்திரீக வல்லுநர்.

ஜோதிடம், மாந்திரீகம் எனச் சொல்லிபெண்கள் - நடிகைகளிடம் பாலியல் கொடுமை!

காவல்துறையிடம் சிக்கிய மந்திரவாதி கக்கிய உண்மை
கோவை, ஜன.30- ஜோதிடம், மந்திரம் சொல்வதாகக் கூறி பெண்களை மயக்கி காம இச்சைக்கு ஆட்படுத்திக் கொண்ட மந்திரவாதி பற்றி திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tuesday, January 25, 2011

அமர்நாத் பனிலிங்கம் மோசடி . video.

அமர்நாத் பனி லிங்க மோசடி - தொடர்வது என்ன?

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை போல ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். பனிலிங்கம் என்று மோசடி.

அய்யப்பன் மகரவிளக்கு மோசடியை கேரள அரசு ஒத்துக்கொண்டது போல, என்றைக்கு இதைக் காசுமிர் அரசு ஒத்துக் கொள்ளப் போகிறதோ? அந்த நாள் விரைந்து வரட்டும்.
பனிலிங்கம் என்று மோசடி செய்து மடமையை வளர்த்துக் காசு பார்க்கிறார்கள்  .

Sunday, January 23, 2011

அய்யப்பன் மகரஜோதி புரட்டு அம்பலம்.

ஒரு ஆன்மீக‌ செப்படி வித்தை அம்பலம். அய்யப்பனுக்கு கூட்டம் சேர்க்க செய்யப்படும் ஒரு செப்படி வித்தையை ஒரு ஆன்மிக மோசடியை அம்பலப்படுத்துகிறோம்.

உண்மை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும், - உயர்நீதிமன்ற நீதிபதிகள்.

The Times of India பிளிட்ஸ் தெகல்கா இந்தியன் எக்ஸ்பிரஸ் தினமலர் விடுதலை The Illustrated Weekly களிலிலும் அம்பலம்.

மகர ஜோதி இவ்வளவு காலமும் ஒரு மோசடி வேலைதான்
சபரிமலை மகரஜோதி மனிதனால் ஏற்பாடு செய்யப்பட்டதா?

பாம்பும் நோகாமல் பாம்படித்த கொம்பும் நோகாமல் அப்படியும் இப்படியுமாகக் கூறித் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

வழக்கம்போல இவ்வாண்டும் சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு மகர ஜோதியைத் தரிசிப்பதற்காகப் பக்தர்கள் சென்றனர் (14.1.2011) மகரஜோதி தரிசனம் முடிந்து திரும்பும் போது நள்ளிரவில் புல்மேடு எனும் இடத்தில் கடுமையான பக்தர்களின் நெரிசல் ஏற்பட்டது.

அதில் 102 பேர் பரிதாபகரமான முறையில் சாகடிக்கப்பட்டனர்.
இந்த விபத்துக்கான காரணம் குறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

Sunday, December 12, 2010

சடங்குகள் சம்பிரதாயங்கள் துன்பங்களைத் துரத்துமா ?

கேட்கிறவன் கேனப்பயல்னா எருமைமாடு கூட ஏரோப்பிளேன் ஓட்டுமாம்.

ராகு கேதுவைப் பார்க்கிறான். கேது சனியைப் பார்க்கிறான் என அடுத்த வீட்டு ஜன்னல் திறந்திருக்கும் போது எட்டிப் பார்ப்பதைப் போல கதைவிடுகிறார்கள்.

'அஞ்சாம்கிலாஸ்' கூட தாண்டாதவன் கிரகங்களின் நடமாட்டத்தை மிகத் துள்ளியமாகக் கணிக்கிறானாம். நம்புங்கள்.

கருத்தவன் செவத்தவளைக் கட்டலாம் ஆனால் செவத்தவன் கருத்தவளைக் கட்டமாட்டான். புரோகிதர்களும் கல்யாண‌மும்.

Saturday, December 11, 2010

பஞ்சாங்கம் பார்த்தா உடலுறவு?

முகூர்த்த நாளில் மணம் முடித்தால் தான் பிள்ளை குட்டிகள் பிறக்குமா?
முகூர்த்தமல்லாத நாளிலும், நேரத்திலும் திருமணம் செய்தால் மனிதர்களுக்கு என்ன கரடிக் குட்டிகளா பிறக்கும்?

குடும்ப வாழ்வில், பாலியல் உறவில் ஏற்படும் பிரச்சனைகளை-அதன் பலவீனங்களை திருமணத்தோடு தொடர்பு படுத்தி, இது போன்று நாள் நேரம் குறிக்கும் சதியை ஒரு கூட்டம் திட்டமிட்டே அரங்கேற்றியிருக்க வேண்டும்.

Friday, October 29, 2010

வாஸ்து வுக்கு வைத்தியம் செய்யலாமா?

`வாஸ்து’; `நட்சத்திரம்’ இந்த இரண்டும் மக்களைப் படுத்தி வைக்கும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல. ஆரம்பத்தில் நம்பிக்கையை அடித்தளமாகக் கொண்டிருந்தது இப்போது Fashion cum passion ஆகி விட்டது. அதைக் கடைப்பிடிப்பவர்களை மட்டுமல்லாது சுற்றி இருப்பவர்களையும் சேர்ந்தே கலக்கிவிடுகிறது.

Wednesday, October 27, 2010

வாஸ்து சாபமா? வரமா?

வாஸ்து தேவைதானா? வாஸ்து வை சாக்காக வைத்து காசு அள்ளுபவர்கள். கிழக்கை வடக்கு பண்ணுகிறார்கள், வடக்கை தெற்கு பண்ணுகிறார்கள்
--------------
வாஸ்து - vasudevan.dr

அந்த வார்த்தைக்கு இன்னும் மதிப்பு ஏற வேண்டுமானால் முதல் எழுத்து குறிலாக இருக்கவேண்டும் என்கிறபடியால் அந்த 'காலை' [சன்னல்] எடுத்து அடுத்த எழுத்துக்குப் பக்கத்தில் போட்டு விட்டோம். ஒற்றைப்படை இலக்கத்தில் எழுத்துகள் இருப்பதை விடவும் இரட்டைப்படை இலக்கத்தில் இருந்தால் நல்லது என்கிற அடிப்படையில் 'த்' என்கிற ஒரு எழுத்தை இணைத்து விட்டோம். அவ்வளவே!

Tuesday, October 26, 2010

குறிபார்த்தல் கைரேகை பித்தலாட்டங்கள்.

குறி சொல்வார் யார் என்று பார்ப்போம்.மூடநம்பிக்கைகளில் சிலவற்றை, விஞ்ஞான முறைப்படி விசாரித்து வந்ததில் அவை இரண்டு காரணங்களால் உண்டாகியிருக்க வேண்டுமென அறிந்தோம். அவையாவன:

வெறும் பழக்க வார்த்தைகளைக் கொண்டே பல மூடநம்பிக்கைகள் நிலைத்து வருகின்றன. இரண்டாவது, ஏகதேச சந்தர்ப்பங்களிலிருந்து மூடநம்பிக்கைகள் பிறந்திருக்க வேண்டுமெனவும் தெரிந்து கொண்டோம். சில மூடநம்பிக்கைகளுக்கு நமது ஆசையே காரணமாய் இருக்கலாம் எனவும் தெரிந்தது.

பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஜோதிடம்.

ஜோதிட புரட்டு. அறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்கள் பார்ப்பனர்களே!.

மனிதன் தோன்றிய நாளிலிருந்து பல பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். முதலில் காற்று, மழை, இடி, மின்னல் ஆகியவற்றின் சீற்றத்திலிருந்தும் இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும், விலங்குகளிலிருந்தும் தன்னை காத்துக் கொள்ள பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருந்தது. மனிதன் அறிவியல் பலமுள்ளவனாக இருந்தாலும், மனவலிமையில் சில நேரங்களில் பலமற்றவனாகவே இருந்து வருகின்றான்.

Monday, October 25, 2010

சனிக்கிழமை சடங்கானாவள் சோரம் போவாளா?

சனிக்கிழமை சடங்கானா சோரம் போவான்னா எழுதி வைத்திருக்கின்றீர்கள் என்று திருமண ஜோதிடர்களை தேடி தேடி உதைக்கப் போகின்றார்கள். காத்திருப்போம். விழிப் புணர்வை ஏற்படுத்துவோம்.